தலைமறைவு குற்றவாளி கைது
சென்னை, தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன், 25, என்பவர் வழிப்பறி வழக்கில், 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.இவ்வழக்கு விசாரணை, சைதாப்பேட்டை, 18வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்தார்.பின் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததை அடுத்து, கடந்தாண்டு மே 7ம் தேதி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.இந்த நிலையில், நேற்று தலைமறைவாக இருந்த கோபிகிருஷ்ணன் என்பவரை, தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.