பீச் - செங்கை தடத்தில் இன்று ஏசி ரயில் ரத்து
சென்னை, பராமரிப்பு பணி காரணமாக, கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், இன்று 'ஏசி' மின்சார ரயில் சேவை, ரத்து செய்யப்படுகிறது.இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:★ கடற்கரை - செங்கல்பட்டு இன்று மாலை 3:45 மணி 'ஏசி' ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது★ செங்கல்பட்டு - கடற்கரை மாலை 5:45 மணி 'ஏசி' ரயில், ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.