மேலும் செய்திகள்
25 புதிய தாழ்தள பஸ் சேவை துவக்கினார் அமைச்சர்
10-Oct-2024
சென்னை,சென்னையில், குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால், ஆறு ஆண்டுகளுக்கு முன், தாழ்தள பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், மீண்டும் தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, மாநகர போக்குவரத்து கழகத்திற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.முதற்கட்டமாக 58 பேருந்துகள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செயல்பாட்டிற்கு வந்தன. இந்த வகை பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி உட்பட, பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து, கடந்த சில வாரத்தில் மட்டும், மேலும் 103 தாழ்தள பேருந்துகள் இணைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதனால், மாநகர போக்குவரத்து கழகத்தில், தாழ்தள பேருந்துகளின் எண்ணிக்கை, 331 ஆக உயர்ந்துள்ளது. எஞ்சியுள்ள பேருந்துகள் மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10-Oct-2024