கபாலீஸ்வரர் கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை
சென்னை, கொளத்தூர், கபாலீஸ்வரர் கல்லூரியில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் பேசியதாவது: கபாலீஸ்வரர் கல்லுாரி ஐந்தாம் ஆண்டை துவக்கியிருக்கும் நிலையில், மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது, 743 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேர்க்காணல் வாயிலாக, 347 மாணவ, மாணவியர் வேலை வாயப்பு பெற்றுள்ளனர்.பூம்புகார் நகரில், 25 கோடி ரூபாயில் இக்கல்லுாரியின் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. வரும் ஜனவரியில் புதிய கட்டடம் திறக்கப்படும். இந்தாண்டு காஞ்சி, ஏகாம்பரநாதர் கோவில் சார்பில் கீழ்ப்பாக்கத்திலும், சமயபுரம், மாரியம்மன் கோவில் சார்பில் சமயபுரத்திலும் இரண்டு செவிலியர் கல்லுாரிகள் துவக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.***