உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஷிவ் நாடார் பல்கலையில் பிஎச்.டி., சேர்க்கை துவக்கம்

ஷிவ் நாடார் பல்கலையில் பிஎச்.டி., சேர்க்கை துவக்கம்

சென்னை, சென்னையில் உள்ள ஷிவ் நாடார் பல்கலையில், 2025ம் ஆண்டிற்கான பிஎச்.டி., சேர்க்கை துவங்கி உள்ளது.சென்னை, காலவாக்கத்தில் உள்ள எஸ்.என்.யு., எனும் ஷிவ் நாடார் பல்கலையில், 2025ம் ஆண்டிற்கான பிஎச்.டி., சேர்க்கை துவங்கி உள்ளது.இதற்கான கடைசி தேதியாக, வரும் 13ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், சுற்றுச்சூழல் அறிவியல் பொறியியல், ஆங்கிலம், வணிகம், பொருளாதாரம், கணிதம் உள்ளிட்ட பாடங்களில், முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.மேலும், 8.5க்கும் மேல் சி.ஜி.பி.ஏ., வைத்துள்ள இன்ஜினியரிங் துறையினர் நேரடி பிஎச்.டி.,யில் சேரலாம்.மேலும் விபரங்களுக்கு, 'snuchennai.edu.in' என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ