உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை பொருள் கடத்தல் ஆப்ரிக்க நபர் டில்லியில் கைது

போதை பொருள் கடத்தல் ஆப்ரிக்க நபர் டில்லியில் கைது

சென்னை, அண்ணாசாலை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், கடந்த மார்ச் 9ம் தேதி ஒயிட்ஸ் சாலை - ஸ்மித் சாலை சந்திப்பில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, போதைப் பொருள் வைத்திருந்த விக்னேஸ்வரன், 24, உட்பட, 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 23 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 1.67 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், வழக்கில் தலைமறைவானவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.இந்த நிலையில், டில்லியில் தலைமறைவாக இருந்த, ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த அபவ், 39, டில்லியைச் சேர்ந்த ராகுல், 19, ஆகிய இருவரையும், தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 15 கிராம் கோகைன், 7 கிராம் ஹெராயின், 3 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 50,000 ரூபாய் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை அழைத்து வந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி