சென்ட்ரல் கோபுரம் மேம்படுத்த ஒப்பந்தம்
சென்னை, சென்னை சென்ட்ரல் கோபுர மேம்பாட்டு பணியை, 349.99 கோடியில் மேற்கொள்ள, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ரெனாட்டஸ் ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கோபுர மேம்பாட்டு பணிகளை, 349.99 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ரெனாட்டஸ் ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் ரெனாட்டஸ் ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் நிறுவன நிர்வாக இயக்குநர் மனோஜ் பூசப்பன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ், லிவிங்ஸ்டன் எலியாசர் உட்பட பலர் உடனிருந்தனர்.