மேலும் செய்திகள்
வேன்மோதி முதியவர் பரிதாப பலி
26-Aug-2025
ஆதம்பாக்கம்:அ.தி.மு.க., பிரமுகரை பீர்பாட்டிலால் சரமாரியாக குத்தியவரை போலீசார் கைது செய்தனர். ஆதம்பாக்கம், மன்னடியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 42. இவர், அ.தி.மு.க., மாணவர் அணி முன்னாள் துணைத் தலைவர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு தன் உறவினரான ஹரி என்பவருடன், அப்பகுதியில் உள்ள சிறார் விளையாட்டு மைதானத்தில் மது அருந்தினார். அப்போது, அவ்வழியாக நடந்து சென்ற ஹரியின் சித்தப்பாவை, சிலம்பரசன் கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையில் திட்டிக் கொண்டனர். ஆத்திரமடைந்த ஹரி, பக்கத்தில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து, சிலம்பரசனின் தலை மற்றும் முதுகில் குத்தியுள்ளார். முதுகில் ரத்தம் பீறிட்டு, மண்டை உடைந்த நிலையில் சிலம்பரசன் அலறினார். அக்கம் பக்கத்தினர் சிலம்பரசனை மீட்டு, கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த ஆதம்பாக்கம் போலீசார், ஹரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
26-Aug-2025