மேலும் செய்திகள்
சென்னை - கொச்சி விமான சேவை மார்ச் 30ல் துவக்கம்
09-Mar-2025
சென்னை, கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக அட்டவளை வெளியிடப்பட்டுள்ளது.கோடை விடுமுறையில் பல்வேறு இடங்களுக்கு பயணியர் சுற்றுலா செல்வது வழக்கம். இதனால், விமான நிறுவனங்கள் தங்களின் அட்டவணையில் மாற்றம் செய்து, விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும். அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும், பல்வேறு விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதே போல் சென்னையில் இருந்து பெங்களூரு, டில்லி,ஹைதிராபாத்,மதுரை, மும்பை,கொச்சி, துாத்துக்குடி, திருச்சி,புனே, சீரடி, நொய்டா,வாரணாசி என 23 நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகள் எண்ணிக்கை 10 மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளன. 42 சர்வதேச விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 206 கோடை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.★★★விமான சேவைகளின் விபரம்இடம் விமான நிறுவனம் பழைய எண்ணிக்கை புது எண்ணிக்கைகொழும்பு ஏர் - இந்தியா 7 10தமாம் ஏர் - இந்திய எக்ஸ்பிரஸ் 2 3குவைத் ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ் 5 7மஸ்கட் ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ் 1 2யாழ்ப்பாணம் அலையன்ஸ் ஏர் 0 7பக்ரைன் கல்ப் ஏர் 7 10குவைத் இண்டிகோ 0 7மஸ்கட் ஒமன் ஏர் 11 14கொழும்பு ஸ்பைஸ் ஜெட் 0 7டாக்கா பங்ளா ஏர்லைன்ஸ் 3 11
09-Mar-2025