உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவள்ளூர் மாவட்ட செஸ் அக் ஷய், தனிஷ்கா முதலிடம்

திருவள்ளூர் மாவட்ட செஸ் அக் ஷய், தனிஷ்கா முதலிடம்

சென்னைதிருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் மற்றும் ஆக்ஸ்போர்டு பள்ளி சார்பில், திருவள்ளூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி, திருநின்றவூரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்தது.இதில், 9, 12, 15 மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்பட்டன. போட்டியில், மாவட்டத்திற்கு உட்பட 60 பள்ளிகளைச் சேர்ந்த, 327 சிறுவர் - சிறுமியர் உற்சாகமாக பங்கேற்றனர்.ஒன்பது வயது பிரிவில் சிறுவரில் அக் ஷய் பிரதாப், சிறுமியரில் தனிஷ்கா ஆகியோர் தலா ஆறு புள்ளிகள் பெற்று, முதலிடத்தை கைப்பற்றினர்.அதேபோல், 12 வயது பிரிவில், ரூபேஷ் மற்றும் வர்ணிகா; 15 வயதில் பிரஜீஷ் மற்றும் சகனா பிரியா ஆகியோர், முதலிடங்களை வென்றனர்.யு - 25 பிரிவில், சித்தேஷ் மற்றும் சந்தானலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள், மாநில போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ