மேலும் செய்திகள்
சிகிச்சை பலனின்றி டெய்லர் உயிரிழப்பு
05-Nov-2024
அம்பத்துார்:அம்பத்துார், காமராஜர் நகர் புதிய பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல், 33; புத்தக கடையில் பணிபுரிந்து வருகிறார்.இவர், நேற்று முன்தினம் இரவு, மது அருந்திவிட்டு, முகப்பேர் சாலை, சத்யா நகரில் உள்ள பெட்டி கடை அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.அப்போது, அங்கு மதுபோதையில் வந்த ஓட்டேரி, முத்து நகரைச் சேர்ந்த மேக சூர்யா, 25, பாடியைச் சேர்ந்த பெரியசாமி, 29, இருவரும், 'ஏன் சத்தம் போட்டு பேசுகிறீர்கள்' என பழனிவேலையும், அவரது நண்பர்களையும் பார்த்து கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் கைகலப்பானது.மேகசூர்யா தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து, பழனிவேலின் முதுகில் குத்தி கிழித்துள்ளார். படுகாயம் அடைந்த பழனிவேலை, உடனிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாயிலாக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.பின், இது குறித்து வழக்கு பதிந்த கொரட்டூர் போலீசார், மேக சூர்யா, பெரியசாமி இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
05-Nov-2024