உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர்களுக்கு தாராளமாக கிடைக்கும் போதை வஸ்துக்கள் கிராம சபை கூட்டத்தில் குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு தாராளமாக கிடைக்கும் போதை வஸ்துக்கள் கிராம சபை கூட்டத்தில் குற்றச்சாட்டு

தாம்பரம், 'சென்னை புறநகர் பகுதிகளில், மாணவர்களுக்கு தாராளமாக போதை வஸ்துக்கள் கிடைக்கிறது. இதனால், அவர்கள் தடம்மாறுகின்றனர்' என, கிராம சபை கூட்டத்தில் மக்கள் குற்றஞ்சாட்டினர்.தாம்பரம் அடுத்த கவுல்பஜார் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு மர்ம நபர்களால் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. இதனால், இதை கட்டுப்படுத்தும் விதமாக, மாலை நேரத்தில் பள்ளிக்கு போலீசார் ரோந்து செல்ல வேண்டும். l முடிச்சூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், குப்பை அகற்றும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும். சாலை பணிகளை மழைக்கு முன் முடிக்க வேண்டும். காய்ச்சல் அதிகரித்து வருவதால், ஊராட்சி பகுதிகளில், மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என, 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.l பொழிச்சலுார் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி பங்கேற்றார். அனைவருக்கும் குடிநீர், மகளிர் உரிமை தொகை, துாய்மை கிராமம் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. l ஆவடி அடுத்த மோரை கிராம சபை கூட்டம் தலைவர் திவாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் 10 கிராமத்தை சேர்ந்த ஊர் பொது மக்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கன்னியம்மன் நகரில் 5,000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சென்னை பாரிமுனை, எழும்பூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு, பேருந்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும், குடியிருப்பு பகுதிகளை சுற்றியுள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது.

கால்வாய் விரிவாக்கம்

மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கத்தில், நேற்று காலை 11:00 மணிக்கு, கிராம சபைக் கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சுஹாசினி தலைமை வகித்தார். 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், நுாக்கம்பாளையம் சாலையில் வேகத் தடைகள் அமைத்தல், மழை நீர் சதுப்பு நிலம் நோக்கி செல்ல, போக்கு கால்வாய்களை அகலப்படுத்துதல், சுற்றி திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துக்கள், தெரு நாய்கள் தொல்லை என, பல்வேறு பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

'கொக்கி' போட்டு மின்சாரம் திருட்டு

திருவள்ளூர் மாவட்டம் கோரமங்கலத்தில் கிராம சபை கூட்டம் தலைவர் நரசிம்மராஜு தலைமையில் நடந்தது வகித்தார். இதில், சமீபத்தில் அமைச்சரான, சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், கலெக்டர் பிரபு சங்கர், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., எஸ்.சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கு தேவையான மின்சாரம், மின் கம்பத்தில் 'கொக்கி' போட்டு திருடியுள்ளனர். அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த இந்த விதிமீறல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ