உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அமிட்டி பிரீமியர் லீக் கூடைப்பந்து எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்

அமிட்டி பிரீமியர் லீக் கூடைப்பந்து எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்

சென்னை, அமிட்டி குளோபல் பிஸ்னஸ் பள்ளி சார்பில், அமிட்டி பிரீமியர் லீக் - 2024 விளையாட்டு போட்டிகள், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தன.இதில், கல்லுாரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், சென்னையில் பல்வேறு கல்லுாரி அணிகள் பங்கேற்று மோதின.காலிறுதி ஆட்டத்தில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 73 - 30 என்ற கணக்கில், எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. தொடர்ந்து நடந்த அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் எம்.சி.சி., அணிகள் மோதின. இதில், 76 - 54 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்றது.விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் ஜேப்பியார் பல்கலை அணிகள் மோதின. போட்டி துவங்கியது முதல் இறுதி வரை, இரு அணிகளும் சமநிலையிலேயே நீடித்ததால், ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.முடிவில், 82 - 80 என்ற இரு புள்ளிகள் வித்தியாசத்தில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !