கோவில் கோபுரம் மீது ஏறிய போதை நபர்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது. கோவிலின் ராஜகோபுரத்தில் சவுக்கு கட்டைகள் கட்டப்பட்டுள்ளனகோபுரத்தை சுற்றி கட்டப்பட்டுள்ள சவுக்கு கட்டையில், கோபுரத்தின் இரண்டாம் நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, ஆண் ஒருவர் அமர்ந்திருந்தார். இது குறித்து, சிவகாஞ்சி போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்தனர்.கோபுரத்தின் மேல் ஏறிய தீயணைப்பு வீரர்கள், அங்கு உட்கார்ந்திருந்த நபரை கீழே இறக்கினர்.போலீசார் விசாரணையில், மது போதையில் அந்த நபர் கோவில் கோபுரத்தின் மீது ஏறியதும், அங்கிருந்து இறங்க தெரியாமல் இருந்ததும் தெரியவந்தது.அவர், மேல் ஒட்டிவாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 45, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.