உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழைய குற்றவாளி ‛குண்டாசில் கைது

பழைய குற்றவாளி ‛குண்டாசில் கைது

செம்பியம்:சென்னை செம்பியம் அடுத்த வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்., நகர், இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி, 44; பழைய குற்றவாளி. இவரை, கடந்த நவம்பர் மாதம் செம்பியம் போலீசார், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இவர் மீது, 12 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, நேற்று முன்தினம், குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்