24 போன்கள் திருடிய ஆந்திர வாலிபர் கைது
சென்னை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், பயணியரின் மொபைல் போன்கள் அடிக்கடி திருடப்படுவதாக தொடர் புகார்கள் வந்தன.இந்த நிலையில், நேற்று முன்தினம் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, நடைமேடைகளில் சந்தேகப்படும் வகையில், வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, முரண்பாடாக பதில் அளித்தார்.இதனால், போலீசார் அவருடைய பையை சோதனை செய்தனர். அப்போது, 24 மொபைல் போன்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 35, எனவும், மொபைல் போன்கள் அனைத்தும், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில், பயணியரிடம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.