உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.1.50 லட்சம் திருட்டு ஆந்திர வாலிபர் கைது

ரூ.1.50 லட்சம் திருட்டு ஆந்திர வாலிபர் கைது

ஆவடி, திருமுல்லைவாயில், செந்தில் நகர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 48; அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் ஸ்ரீதேவி, 2023 டிச., 19ல் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். கீழ்தளத்தில் வசிக்கும் மாமியார் பிரபாவதி, 63, ஆந்திர மாநிலத்தில் உள்ள மகளை பார்க்க சென்றார்.இரண்டு நாட்கள் கழித்து, இருவரும் வீடு திரும்பியபோது, பிரபாவதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த, 1.50 லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது. இதுகுறித்து, திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். ஆந்திர மாநிலம், சேரி நரசன்னபாலம் கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி வல்லுாரி சதீஷ்குமார், 36, திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அம்பத்துாரில் வேலை செய்து வந்த அவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில், 16 மாதங்களுக்குப்பின் திருட்டு ஆசாமி சிக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி