உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணா பல்கலை கூடைப்பந்து எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை அபாரம்

அண்ணா பல்கலை கூடைப்பந்து எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை அபாரம்

சென்னை, அண்ணா பல்கலை சார்பில், பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையே, மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன.இதில், நான்காம் மண்டலத்திற்கான கூடைப்பந்து போட்டிகள், காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., பல்கலை மைதானத்தில் நடந்தது. இதில், பெண்களுக்கான போட்டியின் அரையிறுதியில் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி அணி, 26-- - 8என்ற புள்ளிக்கணக்கில் குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இறுதிப்போட்டியில், 28 - -4 என்ற புள்ளிக்கணக்கில் சாய்ராம் பொறியியல் கல்லுாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.மூன்றாம் இடத்தை தாகூர் கல்லுாரியும், நான்காம் இடத்தை மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி முதல்வர் முருகன் மற்றும் விளையாட்டு துறை இயக்குனர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ