மேலும் செய்திகள்
யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி
19-Sep-2024
சென்னை : பெரம்பூரில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ல் கூலிப்படையினரால் கொடூரமாக கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக ரவுடி திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்த போலீசார், இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 27 பேரை கைது செய்துள்ளனர். இதில் 25 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'சம்பவம்' செந்தில் என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், ரவுடி 'புதுார்' அப்பு என்பவரை தனிப்படை போலீசார் டில்லியில் கைது நேற்று செய்துள்ளனர். இவர், ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல பயன்படுத்தப்பட இருந்த நாட்டு வெடிகுண்டை சப்ளை செய்தவர். அப்பு மீது, ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
19-Sep-2024