உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபரை கத்தியால் தாக்கி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

வாலிபரை கத்தியால் தாக்கி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனு ஓரான், 23; காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.கடந்த, 20ம் தேதி அதிகாலை, பூங்கா ரயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அங்கு, மூன்று பேர் வழிமறித்து, மொபைல்போன், 1,000 ரூபாய், கை பை ஆகியவற்றை பறித்து தப்பினர்.வழக்கு பதிந்த பெரியமேடு போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட சவுகார்பேட்டையைச் சேர்ந்த தீனா, 26, என்பவரை, அன்றைய தினமே கைது செய்தனர். காந்தி நகர், பல்லவன் சாலையைச் சேர்ந்த ஜெயசூர்யா, 20, என்பவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ