போதை பொருள் தயாரித்த மேலும் ஒருவர் பிடிபட்டார்
கொடுங்கையூர்,:கொடுங்கையூர், பிண்ணி நகர் பிரதான சாலையில் உள்ள வீடு ஒன்றில் ஆய்வகம் அமைத்து, 'மெத் ஆம்பெட்டமைன்' எனும் போதை பொருள் தயாரிக்கப்படுவதாக, போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு, கடந்த 22ம் தேதி தகவல் கிடைத்தது.போலீசார் ஆய்வு மேற்கொண்டு, அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் பிரணவ், 21, மீஞ்சூரைச் சேர்ந்த கிஷோர், 21, ஞானபாண்டியன், 22, நவீன், 21, மணலியைச் சேர்ந்த தனுஷ், 23, தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிளமிங் பிரான்சிஸ், 21, செங்குன்றம் அருண்குமார், 38, ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, 245 கிராம் 'மெத் ஆம்பெட்டமைன்' இரு மடிக்கணினிகள், ஏழு மொபைல் போன்கள், எடை பார்க்கும் இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு, சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய, தலைமறைவு குற்றவாளியான பூந்தவல்லி, கோலப்பஞ்சேரியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான ஆகாஷ், 23, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். செங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.