உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடுக்குமாடி குடியிருப்பில் திருடியவர் கைது

அடுக்குமாடி குடியிருப்பில் திருடியவர் கைது

குமரன் நகர், மேற்கு மாம்பலம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாலாஜி, 37. நேற்று முன்தினம் அதிகாலை குடியிருப்பின் மொட்டை மாடியில் சத்தம் கேட்டுள்ளது.மொட்டை மாடிக்கு சென்று பாலாஜி பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் தண்ணீர் தொட்டிகளில் இருந்த பித்தளை வாட்டர் மீட்டர்களை திருடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. சத்தம் கேட்டு வந்த மற்ற குடியிருப்புவாசிகள் உதவியுடன், அந்த நபரை மடக்கி பிடித்து, குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பிடிபட்ட நபர், மேற்கு மாம்பலம் தனபால் தெருவை சேர்ந்த வெங்கடேஷ், 32 என, விசாரணையில் தெரியவந்தது. இரு மாதங்களுக்கு முன், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஷ் பெயின்ட் அடிக்க சென்ற போது, நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளார். வெங்கடேஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஆறு பித்தளை வாட்டர் மீட்டர்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி