மேலும் செய்திகள்
அப்பல்லோவில் அதிநவீன துல்லிய ஆய்வகம் திறப்பு
01-May-2025
சென்னை:வீடுகளுக்கே சென்று முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும், 'அப்பல்லோ எல்டர் கேர்' திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனையின் முதியோர் மருத்துவ ஆலோசகர் பிரியங்கா ராணா பட்கிரி கூறியதாவது:இந்தியாவில், நம்பகமான சுகாதார பராமரிப்புக்கு, அப்பல்லோ மருத்துவமனை சிறந்து விளங்குகிறது.தற்போது, மூத்த குடிமக்களுக்காகவே, 'தி அப்பல்லோ எல்டர் கேர்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை அளிக்கும் வகையில், நிபுணர்கள் அடங்கிய குழு, அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும்.முதியோரின் முழு சிகிச்சை பராமரிப்பு சேவைகைளை, தொடர்ந்து மேற்பார்வையிடுவது, சேவைகளை ஒருங்கிணைப்பது, நம்பகமான டாக்டர் இருப்பதை உறுதி செய்கிறோம்.எனவே, நோயாளி வீட்டிலோ, மருத்துவமனையிலோ எங்கிருந்தாலும், தொடர்ச்சியான அரவணைப்புடன், ஒருங்கிணைந்த சிகிச்சை பராமரிப்பை பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
01-May-2025