வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Ministers must participate only in the government organisation, they shouldn't encourage the private ones
சென்னை : சென்னை வானகரத்தில், அப்போலோ மருத்துவமனையின், 3வது, புற்றுநோய் சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது.சென்னை வானகரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, அப்போலோ மருத்துவமனையின் 3வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியன் திறந்து வைத்தார். குடும்ப நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹூ, அப்போலோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் ரெட்டி, துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்போலோ மருத்துவமனை நிறுவனர் கூறுகையில், ''இந்தியாவில் உள்ள மக்களுக்கு உலகத் தரத்திலான மருத்துவ சிகிச்சை அளிப்பதே, அப்போலோ மருத்துவமனையின் நோக்கமாகவும், செயல்பாடாகவும், இருந்து வருகிறது. சென்னையை சுற்றியுள்ள மக்களுக்கு முதல்தர, மருத்துவ சிகிச்சையை அளிக்கவே வானகரத்தில் 3வது புற்றுநோய் சிகிச்சை மையம் துவக்கப்பட்டு உள்ளது.உயிரை அச்சுறுத்தி வரும், புற்றுநோயை வெல்வதே எங்களின் தொலைநோக்கு திட்டமாகும். ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தவன் மூலம், எங்களிடம் வரும் நோயாளிகளை நல்ல முறையில் பராமரித்து, சாத்தியமுள்ள, சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்'' என்றார்.
Ministers must participate only in the government organisation, they shouldn't encourage the private ones