உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குண்டர் தடுப்பு சட்ட பணி அலுவலர்களுக்கு பாராட்டு

குண்டர் தடுப்பு சட்ட பணி அலுவலர்களுக்கு பாராட்டு

சென்னை, குண்டர் தடுப்பு சட்ட அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர்களை, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று பாராட்டி, வெகுமதி அளித்தார்.சென்னையில், கடந்த ஆண்டு ஜூலை, 8ம் தேதி முதல் நேற்று வரை 1,002 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.குறிப்பாக, கடந்த ஆண்டு ஜூலையில், வடசென்னையில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, 26 குற்றவாளிகளும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ளனர்.இந்நிலையில், குண்டர் தடுப்பு சட்ட அலுவலக பிரிவில் பணிபுரிந்து வரும் கண்காணிப்பாளர் அய்யப்பன் உட்பட குழுவினரை, கமிஷனர் அருண் நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை