உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராணுவ அதிகாரி மயங்கி விழுந்து மரணம்

ராணுவ அதிகாரி மயங்கி விழுந்து மரணம்

மீனம்பாக்கம், துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ அதிகாரி ஒருவர், திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் உமாங்கர், 28; ராணுவ அதிகாரி. பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரி பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த, 16ம் தேதி மீனம்பாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடுதல் மையத்தில், பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே, ராணுவ அதிகாரிகள் அவரை, பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர்.தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, மீனம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை