மேலும் செய்திகள்
பைக் திருட்டு
28-Jun-2025
சென்னை, ஐஸ்ஹவுஸ் பகுதியில், முன்விரோதம் காரணமாக தனியார் நிறுவன ஊழியர் உட்பட இருவரை, தாக்கியோரை போலீசார் கைது செய்தனர்.திருவல்லிக்கேணி, ராம்நகரைச் சேர்ந்தவர் அரவிந்த், 29; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 29ம் தேதி ராம்நகர், 2வது தெருவில் அவரது மாமா நாகராஜன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆகாஷ், அவினாஷ், ஜெகதீஷ் ஆகிய மூவரும், முன்விரோதம் காரணமாக அரவிந்த் மீது தாக்குதல் நடத்தியதுடன், தடுக்க வந்த அவரது மாமா நாகராஜன் மீதும் செங்கல்லால் தாக்கிதப்பிச் சென்றனர்.இதில் காயமடைந்த இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்ட, ஆகாஷ், 26, அவினாஷ், 19, ஜெகதீஷ், 21 ஆகிய மூவரையும், நேற்று போலீசார் கைது செய்தனர்.
28-Jun-2025