உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு புகுந்து மிரட்டி பணம் திருடியோர் கைது

வீடு புகுந்து மிரட்டி பணம் திருடியோர் கைது

சென்னை,புரசைவாக்கம், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் குலசேகரன், 54. மனநலம் பாதிக்கப்பட்டவர்.கடந்த, 1ம் தேதி நள்ளிரவு, இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், குலசேகரனை கட்டிப்போட்டு அடித்துள்ளனர். பின், பீரோவிலிருந்த, 5,000 ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.திருடர்கள் தாக்கியதில் காயமடைந்த குலசேகரன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் படி, கீழ்பாக்கம் போலீசார் விசாரித்தனர். ஐஸ்ஹவுஸ் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இமானுவேல், 36, கொண்டித்தோப்பைச் சேர்ந்த விக்கி, 33, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.பணம் திருடி தப்பிச் செல்லும் போது தவறி விழுந்ததில், விக்கிக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை