அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய கலை கண்காட்சி
சென்னை; தமிழக மாதிரிப்பள்ளி மாணவர்கள் நடத்திய, நாட்டுப்புறவியல் கலைக் கண்காட்சி, நேற்று, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடந்தது. பள்ளிக்கல்வி துறையின் கீழ் ியங்கும், 39 அரசு மாதரிப்பள்ளிகளில், கல்வி இணைச் செயல்பாடுகள் எனும் தலைப்பில், 10 விதமான கலைகள், வாரத்தில் மூன்று நாட்கள், கலை வல்லுணர்களின் வாயிலாக கற்பிக்கப்படுகின்றன. உலக நாட்டுப்புறவியல் தினமான நேற்று, மாதிரி பள்ளி மாணவர்களின் சார்பில், 'கலைகளைக் கருவியாக்குவோம்' என்ற தலைப்பில், 250 பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் நிகழ்த்துக்கலை கருவிகள் உள்ளிட்டவற்றை, சென்னை அருங்காட்சியகத்தில், பொதுமக்களின் பார்வைக்காக, கண்காட்சி அமகை்கப்பட்டது. அதில், தேல் கருவி, துளைக்கருவி, கம்பிக்கருவி எனும் மூவகை கருவிகளின் சிறப்பானவை காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், பறை தயாரிப்பு பொருட்கள், தயாரிக்கும் முறை பற்றிய விளக்கமும் இடம்பெற்றது. நிகழ்த்துக்கலை சார்ந்த கலைஞர்களுடன், மாதிரிப்பள்ளி மாணவர்கள் நேற்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் பங்கேற்ற பறையிசை, நாட்டுப்புற பாடல், கிராமிய நடனம், மாட்டுக்கொம்பாட்டம், சிலம்பாட்டம், கழியாட்டம், பெரிய மேளம், புலியாட்டம், கரகாட்டம் .உள்ளிட்ட நாட்டுப்புறபகலை நிகழ்ச்சிகளும் நடந்தன.