ஆட்டோ திருட்டு வாலிபர் கைது
சென்னை: திருவேற்காடு, ஸ்ரீதேவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்த்தம்மன், 18. கடந்த 26ம் தேதி, கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தியபோது காயமடைந்த இவரது மாமாவை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, தன் ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார். அப்போது, அவசரத்தில் ஆட்டோ சாவியை எடுக்காமலேயே, மாமாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். பின் வெளியே வந்து பார்த்தபோது, ஆட்டோ திருடப்பட்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஜெய்சாம்ராஜ், 38, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், திருடிய ஆட்டோவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெய்சாம்ராஜ் மீது, 5 குற்ற வழக்குகள் உள்ளது, விசாரணையில் தெரியவந்தது.