உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தானியங்கி இயந்திரத்தில் குடிநீர் இனி குறிப்பிட்ட நேரமே பிடிக்கலாம்

தானியங்கி இயந்திரத்தில் குடிநீர் இனி குறிப்பிட்ட நேரமே பிடிக்கலாம்

சென்னை, சென்னையில் ஆங்காங்கே செயல்படும் தானியங்கி குடிநீர் இயந்திரத்தில் 24 மணி நேரமும் குடிநீர் பிடிக்கலாம். இந்நிலையில், நேர நிர்ணயம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 50 இடங்களில், 6.04 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட, தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை, ஜூன் 18ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.மெரினா, எழும்பூர் ரயில் நிலையம் வெளியே மற்றும் அண்ணாநகரில், தலா 9,000 லிட்டர் தொட்டியும், இதர பகுதிகளில் 3,000 லிட்டர் தொட்டியுடன் இயந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.இயந்திரத்தில் இரண்டு பொத்தான்கள் உள்ளன. தேவைக்கேற்ப, 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் பிடித்து கொள்ளலாம்.இந்த வகையில், ஜூலை 11ம் தேதி வரை, 14 நாளில், 13.10 லட்சம் பேர், இந்த இயந்திரத்தை பயன்படுத்தி குடிநீர் பிடித்துள்ளனர். மொத்தம், 13.50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் ஆகி உள்ளது.மக்களிடம் பெரிய அளவில் ஆதரவு கிடைத்துள்ளதால், பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை மற்றும் அதிக மக்கள் கூடும் ரயில் நிலையங்களின் வெளி பகுதியில் குடிநீர் இயந்திரம் அமைக்க, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.தற்போது, 24 மணி நேரம் செயல்படும் வகையில் உள்ளது. இதில் இரவு நேரத்தில், குடிநீரை மது குடிக்கவும், வேறு விதமாகவும் பயன்படுத்துவதால், நேரம் நிர்ணயம் செய்ய வாரியம் முடிவு செய்துள்ளது.

பாட்டில் வியாபாரம் 'டல்'

மெரினா கடற்கரையில், ஒரு லிட்டர் குடிநீர் 20, 30 ரூபாயும், ரயில் நிலையத்தில் 15 ரூபாயும் விற்கப்படுகிறது. இந்த தானியங்கி குடிநீர் இயந்திரம் மூலமாக, இலவச குடிநீர் கிடைப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், இந்த இயந்திரம் அமைத்த பல இடங்களில், கடைகளில் குடிநீர் வியாபாரம் கணிசமாக சரிந்துள்ளது. இரண்டாம் கட்டமாக அமைக்க திட்டமிட்ட பகுதிகளில், கவுன்சிலர், எம்.எல்.ஏ., மூலமாக தடைபோடவும், பல வியாபாரிகள் களம் இறங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை