உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பயன்பாடில்லாத உடற்பயிற்சி கூடம் ஆவடி பகுதிவாசிகள் அவதி

பயன்பாடில்லாத உடற்பயிற்சி கூடம் ஆவடி பகுதிவாசிகள் அவதி

ஆவடி, ஆவடி மாநகராட்சி, 40வது வார்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். 4வது பிளாக்கில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள எம்.ஜி.ஆர்., நகர் சாலை ஓரத்தில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக குப்பை கொட்டி வந்தனர்.அதேபோல், குண்டும்குழியுமான சாலை அருகே திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர், புழுதிக்காற்றை சுவாசித்து பெரும் அவதிப்படுகின்றனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பில் 11 லட்சம் ரூபாயில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் பாழாகி வருகிறது.உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சி கூடம், தற்போது துாசி படிந்து, செடி கொடிகள் முளைத்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. தற்போது, உடற்பயிற்சி உபகரணங்கள் துருப்பிடித்து, காயலான் கடை பொருளாக மாறும் நிலை உருவாகி வருகிறது. மக்கள் வரிப்பணம் வீணாவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், பயிற்சி கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை