உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு விருது

மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு விருது

சென்னை:கட்டுமானத் தகவல் மாதிரியை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு, 'ஆட்டோடெஸ்க் இமேஜின் விருது - 2025' வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில், உட்கட்டமைப்பில் புதுமையான வடிவமைப்பை செயல்படுத்திய நிறுவனம் என்ற பிரிவின் கீழ், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. புதிய உத்திகள் வாயிலாக, கட்டுமானப் பணிகள் வேகமாக நிறைவேற்றப்பட்டு, 50 க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களை, 'ஆடியோ டெஸ்க்' மென்பொருளை பயன்படுத்த வைத்து, கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உட்கட்டமைப்பு மேம்பாட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாகவும், பி.ஐ.எம்., எனும் கட்டுமானத் தகவல் மாதிரியை பயன்படுத்தி, ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி உள்ளதாகவும், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி