உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளி மாணவியர் கூடைப்பந்தில் அசத்தல்

அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளி மாணவியர் கூடைப்பந்தில் அசத்தல்

சென்னை,பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், மாணவியரில் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சிட்லபாக்கம் என்.எஸ்.என்., பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, பள்ளி வளாகத்தில் நடந்தது.இருபாலரிலும் தலா 12 அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில் நடந்த போட்டிகள் முடிவில், மாணவியரில் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மற்றும் பருத்திப்பட்டு வேலம்மாள் பள்ளி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா அணி, 47 - 30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது. மாணவர்களுக்கான போட்டியில், ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி முதலிடத்தையும், பொன்னேரி வேலம்மாள் பள்ளி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்து அசத்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி