உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாடி மேம்பால அணுகு சாலை குப்பை கிடங்காக மாறும் அவலம்

பாடி மேம்பால அணுகு சாலை குப்பை கிடங்காக மாறும் அவலம்

வில்லிவாக்கம்:அத்துமீறி கொட்டப்படும் குப்பை மற்றும் கட்டடக்கழிவுகளால், பாடி மேம்பாலத்தின் அணுகு சாலை குப்பை கிடங்காக மாறி வருகிறது. வில்லிவாக்கம், கொரட்டூர் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களை இணைக்கு பகுதியாக, பாடி மேம்பாலம் உள்ளது. சென்னையின் முக்கிய மேம்பாலங்களில் ஒன்றான இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர். இப்பாலத்தின் கீழ் பகுதியில், திருமங்கலத்தில் இருந்து பாடி நோக்கி செல்லும் அணுகு சாலையோரம் குப்பை கழிவுகள் கொட்டி, கிடங்குபோல் மாற்றப்பட்டு வருகிறது. அங்கு, ஐந்துக்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் வைத்திருந்தும், குப்பை தேக்கம் அடைந்து வருகிறது. குப்பை மட்டுமின்றி கட்டடக்கழிவுகளும், பழைய பொருட்களும் அத்துமீறி கொட்டப்பட்டு வருகின்றன. தவிர, அவ்வழியாக செல்வோர், சிறுநீர் கழிக்கும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் குப்பை சேர்வதை, மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி