காலில் எலும்பு வளர்ந்ததால் பேட்மின்டன் வீரர் தற்கொலை
வண்ணாரப்பேட்டை, சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தனுஷ், 21; இவர், தனியார் கல்லுாரியில் பயோடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மாநில அளவிலான பேட்மின்டன் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் விளையாடி பதக்கம் வென்றுள்ளார். சில மாதங்கள் முன், தனுஷ் வலது காலில் சிறிய எலும்பு ஒன்று கூடுதலாக வளர்ந்ததால், பேட்மின்டன் விளையாட முடியாமல் சிரமப்பட்டார். பேட்மின்டன் விளையாட வேண்டாம் என, டாக்டர்கள் அறிவுரை கூறினர்.பிடித்த விளையாட்டை விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால், தனுஷ் கடும் மன உளைச்சலில் இருந்தார்.இந்நிலையில், கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய அவர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் வார்ப்பு பகுதியில், கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.தனுஷின் உடல் பாறைகளுக்கு நடுவே சிக்கி, சிதிலமடைந்தது நேற்று தெரிய வந்தது.தீயணைப்பு வீரர்கள், கிரேன் உதவியுடன் பாறைகளை அகற்றி, தனுஷின் உடலை மீட்டனர்.இதகுறித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரிக்கின்றனர்.