மேலும் செய்திகள்
காலிறுதியில் லக்சயா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
23-Oct-2025
சென்னை: மங்களூரில் நடந்த சர்வதேச சேலஞ்சர்ஸ் பேட்மின்டன் போட்டியில், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவன் தங்கம் வென்றார். மங்களூரில், 'முதல்வர் கோப்பை - சர்வதேச பேட்மின்டன்' போட்டி, அக்., 28ல் துவங்கி, 2ம் தேதி நிறைவடைந்தது. போட்டியில், 10 நாடுகளை சேர்ந்த, 160 வீரர்கள் பங்கேற்றனர். இதில், தனிநபர் போட்டியில் காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவன் ரித்விக் சஞ்சீவி, இந்தியா சார்பில் பங்கேற்றார். காலிறுதியில், ரித்விக் சஞ்சீவி, 16 - 21, 21 - 15, 21 - 22 என்ற கணக்கில், சக இந்திய வீரர் சனீத் தயானந்தை வீழ்த்தினார். அரையிறுதியில் ரித்விக் சஞ்சீவி, 21 - 12, 21 - 17 என்ற கணக்கில் மற்றொரு இந்திய வீரர் ஆனந்தாஸ் ராஜ்குமாரை தோற்கடித்தார். விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் ரித்விக் சஞ்சீவி, இந்திய வீரர் ரவுனக் சவுஹான் மோதினர். அதில், ரித்விக் சஞ்சீவி 14 - -21, 21- - 19, 21 - -19 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
23-Oct-2025