உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பால்பேட்மின்டன் அரசு பள்ளி முதலிடம்

பால்பேட்மின்டன் அரசு பள்ளி முதலிடம்

சென்னை, அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், வடசென்னை வருவாய் மாவட்ட அளவிலான ஆடவர் பால் பேட்மின்டன் போட்டிகள், அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மூன்று பிரிவிலும், தலா 13 அணிகள் எதிர்கொண்டன. இதில், 14 வயதுக்குட்பட்ட பிரிவில், திருவொற்றியூர் மண்டலம் கத்திவாக்கம் அரசு பள்ளி முதலிடத்தையும், பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி இரண்டாம் இடத்தையும் கைப்பற்றியது.அதேபோல், 17 வயதுக்குட்பட்ட பிரிவில், கத்திவாக்கம் அரசு பள்ளி முதலிடத்தையும், திரு.வி.க., நகர் டான்பாஸ்கோ பள்ளி இரண்டாம் இரண்டாம் இடத்தையும் வென்றது.தொடர்ந்து, 19 வயதுக்குட்பட்ட பிரிவில், கத்திவாக்கம் அரசு பள்ளி முதலிடத்தையும், அண்ணா நகர் மண்டலம் செயின்ட் ஜார்ஜ் பள்ளி இரண்டாம் இடத்தையும் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை