உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெர்ட்ரம் வாலிபால்: சூப்பர் லீக் சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி

பெர்ட்ரம் வாலிபால்: சூப்பர் லீக் சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி

சென்னை, 'பெர்ட்ரம்' நினைவு வாலிபால் போட்டியில், லயோலா, பி.எஸ்.ஜி., - பனிமலர், சேக்ரட் ஹார்ட் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன. லயோலா கல்லுாரியின் நிறுவனர், 'பெர்ட்ரம்' நினைவு விளையாட்டு போட்டிகள், 91வது ஆண்டாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பள்ளி, கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.இதில், கல்லுாரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில், 32 அணிகள், 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் மோதி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில், லயோலா எல்லோ மற்றும் திருப்பத்துார் சேக்ரட் ஹார்ட் அணிகள் மோதின. அதில், சேக்ரட் ஹார்ட் அணி, 22 - 25, 25 - 17, 23 - 25, 27 - 25, 15 - 13 என்ற கணக்கில் லயோலாவை வீழ்த்தியது. நேற்றைய போட்டியில், பனிமலர் அணி, 25 - 15, 25 - 11, 25 - 12 என்ற கணக்கில் செயின்ட் ஜோசப் அணியை தோற்கடித்தது. அனைத்து போட்டிகள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில், லயோலா எல்லோ, கோவை பி.எஸ்.ஜி., - திருப்பத்துார் சேக்ரட் ஹார்ட், பனிமலர் ஆகிய நான்கு அணிகள் லீக் சுற்றுக்கு தகுதிபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி