உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விநாயகர் சிலைகள் இறக்க அனுமதி பாரத் இந்து முன்னணி வலியுறுத்தல்

விநாயகர் சிலைகள் இறக்க அனுமதி பாரத் இந்து முன்னணி வலியுறுத்தல்

சென்னை:'சென்னை கொசப்பேட்டை பகுதியில், விநாயகர் சிலைகள் விற்பனை செய்யவும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கவும், மாநகராட்சி மற்றும் காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும்' என, பாரத் இந்து முன்னணி தலைவர் பிரபு வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: சென்னை கொசப்பேட்டை பகுதியில், விநாயகர் சிலைகளை இறக்கவும், வைத்திருக்கவும் போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். விநாயகர், கிருஷ்ணர் என, அனைத்து தெய்வ சிலைகள், நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக, கொசப்பேட்டையில் தயார் செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே, அதன் மையப்பகுதி கொசப்பேட்டைதான். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, 24 நாட்களே உள்ள நிலையில், சிலைகள் இறக்க, போலீசார் தடை விதிப்பது வேதனையாக உள்ளது. ஆந்திரா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், சிலைகள் செய்பவர்களுக்கு, அரசே இலவசமாக இடம் கொடுத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் மண்பாண்டங்கள், சிலைகள் செய்வோருக்கு, இடம் ஒதுக்கி தரப்படவில்லை. சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானங்கள் மற்றும் சூளை, புளியந்தோப்பு பகுதியில் ஏராளமான விளையாட்டு மைதானங்கள் உள்ளன. அங்கு தற்காலிகமாக விநாயகர் சிலை வைப்பதற்கு, அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆண்டாண்டு காலமாக, கொசப்பேட்டையில் சிலை விற்பனை செய்தவர்கள் எப்படி செய்தனரோ, அதேபோல் விற்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி