மெட்ரோ ரயில்களில் சைக்கிள் எடுத்து செல்ல அனுமதி இல்லை
சென்னை: 'மெட்ரோ ரயில்களில் சைக்கிள் எடுத்து செல்ல அனுமதி இல்லை'என, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் சேவை துவக்கத்தின்போது, முதல் வகுப்பு பெட்டியில் மட்டும், சைக்கிள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. தற்போது இந்த பெட்டி, பெண்களுக்கான பெட்டியாக மாற்றப்பட்டுள்ளது. நான்கு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், அலுவலக நேரங்களில் நெருக்கடி ஏற்படுகிறது. சைக்கிள்களை ஏற்றிச்செல்ல போதிய இடமிருக்காது; மற்ற பயணியருக்கு அசவுரியத்தை ஏற்படுத்தும். இதனால், மெட்ரோ ரயில்களில் சைக்கிளுக்கு அனுமதியில்லை. ஆனால், மாற்றுத்திறனாளிகள் செல்லும் மூன்று சக்கர சைக்கிள் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. மாற்றுத்திறனாளிகள் மெட்ரோ ரயில்களில் செல்ல, அனைத்து வசதிகளையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.