உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி ஏறி பீகார் நபர் உயிரிழப்பு

லாரி ஏறி பீகார் நபர் உயிரிழப்பு

பூந்தமல்லி :பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில், சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், கன்டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.அந்த லாரி ஓட்டுநரான, பீகார் மாநிலத்தை சேர்ந்த பகவான் ராம், 42, நேற்று லாரியை இயக்கினார்.அப்போது, லாரியின் அடியில் படுத்திருந்த, 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் தலையில், லாரி ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !