பைக் திருடர்கள் கைது
-- கண்ணகி நகரைச் சேர்ந்தவர் மதன்குமார், 20; தனியார் நிறுவன ஊழியர். இவரது 'யமஹா ஆர்15' என்ற வாகனம், இரு நாட்களுக்கு முன் திருடுபோனது. கண்ணகி நகர் போலீசார் விசாரித்து, ராயப்பேட்டை, சர்தார் கார்டன் பகுதியைச் சேர்ந்த லோகேஷ், 23, பைரோஸ்கான், 24, என தெரிந்தது. இருவரையும், நேற்று கைது செய்த போலீசார், வாகனத்தை பறிமுதல் செய்தனர். -- 5 கிலோ கஞ்சா பறிமுதல் வேளச்சேரி ரயில் நிலையம் அருகே, கஞ்சா விற்பதாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பார்த்தபோது, வேளச்சேரி, நேரு நகரைச் சேர்ந்த திருப்பதி, 46, கஞ்சா பொட்டலங்களுடன் இருந்தார். போலீசார் அவரை கைது செய்து, மறைந்து வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். -- பூட்டிய வீட்டுக்குள் கைவரிசை புளியந்தோப்பு, கே.பி.பூங்கா குடியிருப்பைச் சேர்ந்தவர் நாகஜோதி, 34; வேன் ஓட்டுநர். வீட்டில் வைத்திருந்த 32,000 ரூபாய் மொபைல் போன், 6,000 ரூபாய் திருடுபோனது. கதவு இல்லாத சமையல் அறை ஜன்னல் வழியே வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. பேசின்பாலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். -- பயிற்சி முகாம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் மத்திய அரசின் தென் மண்டல திறன் மேம்பாடு இயக்ககம் இணைந்து, ஐ.ஐ.டி., படித்தவர்களுக்கு, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் நடத்துகிறது. முகாம், வடசென்னை, ஆர்.கே.நகர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் வரும், 11ம் தேதி, காலை 9:00 மணிக்கு நடக்கிறது. தொழிற் பழகுநர் பயிற்சி முடிக்காத, ஐ.டி.ஐ.,யில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், http://www.apprenticeshipindia.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.