கஞ்சா வழக்கு பா.ஜ., நிர்வாகி கைது
சென்னை: கஞ்சா வைத்திருந்த வழக்கில், பா.ஜ., நிர்வாகி கைது செய்யப்பட்டார்.ஓட்டேரியைச் சேர்ந்தவர் குணசேகரன், 45. இவர், பா.ஜ., வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலராக உள்ளார். இவர் மீது, ஆறு வழக்குகள் உள்ளன.இந்த நிலையில், நேற்று தலைமைச் செயலக காலனி போலீசார் நடத்திய சோதனையில், அவரிடம் இருந்து 1.800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக குணசேகரன் மற்றும் அவரது இரு கூட்டாளிகளான ஓட்டேரியைச் சேர்ந்த 'பண்டாரம்' அரவிந்த், 29, புரசைவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார், 30, ஆகியோர், நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.