உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கருப்பு துப்பட்டா: போலீஸ் விளக்கம்

கருப்பு துப்பட்டா: போலீஸ் விளக்கம்

சென்னை: சென்னை, எழும்பூரில் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு கருப்பு துப்பட்டா அணிந்து வந்த மாணவியரிடம் இருந்து, அவற்றை வாங்கி வைத்தது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகர போலீசார் வெளியிட்ட அறிக்கை: சென்னை, எழும்பூரில் நடந்த அரசு விழாவில், சென்னை பெருநகர காவல் பாதுகாப்பு பிரிவு போலீசார், அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட நபர்களை சோதனை செய்து அனுப்பினர். அப்போது, கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவியரிடம் அதை வாங்கி வைத்-தனர். அங்கு பணியில் இருந்த போலீசார், தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் இது நிகழ்ந்தது என தெரிய வருகிறது. இனி, அதுபோன்று நிகழாமல் இருப்பதற்கு, எஸ்.சி.பி., எனப்படும் பாதுகாப்பு பிரிவு போலீசாருக்கு, தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்-டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பெரிய ராசு
ஜன 06, 2025 10:11

துப்பட்டா என்பது பெண்களின் மானம் காக்க பயன்படுவது, அதை பறிப்பது மானபங்கப்படுத்துவதற்கு சமம் ஆகவே நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து தண்டனை தரவேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 06, 2025 15:14

கழக உடன் பிறப்புல ஒருத்தரு புதுசா நாயுடு ஹால் பிஸினஸ் ஆரம்பிக்கப்போராறாம். அதுக்காக மார்க்கெட் சர்வேயை போலீஸ் டீபார்ட்மெண்ட் எடுத்து தந்திருக்காம்.


சமீபத்திய செய்தி