உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொடர்ந்து புறக்கணித்தால் தீவிர போராட்டம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு

தொடர்ந்து புறக்கணித்தால் தீவிர போராட்டம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு

சென்னை,கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்தால், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்து, தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என, பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.அச்சங்கத்தின் பொதுச் செயலர் ரூபன்முத்து கூறியதாவது:பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் உள்ளிட்ட சங்கத்தினர் போராடி வருகின்றனர்.ஆனால், இதுவரை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் புறக்கணிப்பது, மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, முதல்வர் நிறைவேற்றக்கோரி, கடந்த 22ம் தேதி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை ஈவு இரக்கமின்றி காவல் துறை கைது செய்துள்ளது.இதை வன்மையாக கண்டிக்கின்றோம். இனியும் காலம் தாமதிக்காமல் சங்கத்தின் பிரதிநிதிகளை முதல்வர் நேரில் அழைத்து பேசி, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.முதல்வர் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும்பட்சத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து, தீவிர போராட்டத்தை முன்னெடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !