உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெட்டு காயங்களுடன் கிடந்த வாலிபர் உடல்

வெட்டு காயங்களுடன் கிடந்த வாலிபர் உடல்

எண்ணுார், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆகாஷ், 19. இவர் மீது, அடிதடி உள்ளிட்ட இரு வழக்குகள் உள்ளன.இந்நிலையில், நேற்று காலை, எர்ணாவூர் மேம்பாலம் கீழ், ரயில்வே தண்டவாள பகுதியில், தலை மற்றும் உடலில் பலத்த வெட்டு காயங்களுடன், ஆகாஷ் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தண்டவாள பகுதியில், மரம் வெட்டும் கோடாரியும் கைப்பற்றப்பட்டுள்ளது. வாலிபர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ