3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை,ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, நேற்று காலை 6:30 மணிக்கு, பள்ளியின் பிரத்யேக மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் வந்தது.இதே போல், திருவல்லிக் கேணியில் உள்ள ஸ்ரீ ஜடாவ்பாய் நாத்மல் சிங்வி ஜெயின் பள்ளிக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.அதேபோல், கோட்டூர்புரம் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கும், நேற்று காலை 9:12 மணியளவில், அனுஷா தயாநிதி பெயரில் இ - மெயில் வாயிலாக, வெடிகுண்டு மிரட்டல் வந்தது.சம்பவம் அறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், இப்பள்ளிகளில் சோதனை செய்ததில், எந்தவித வெடி பொருட்களும் கிடைக்காததால் மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது.