உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

 ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

பாரிமுனை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, 'டி8' அலுவலகத்துக்கு, இ -- மெயிலில் மிரட்டல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், இரண்டு மோப்ப நாய் உதவியுடன் உயர் நீதிமன்ற வளாகத்தில், தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை எனவும், மிரட்டல் வெறும் புரளி எனவும் தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ