அமெரிக்க துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், சென்னை, அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துாதரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி, இணைப்பை துண்டித்துள்ளார்.உடனே இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் அமெரிக்க துாதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் துாதரகம் முழுதும், போலீசார் சோதனை மேற்கொண்டனர்.இதில், வெடிப் பொருட்கள் ஏதும் கிடைக்காததால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த எண்ணை வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.